நிலக்கரித் துறையில் வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த சாலை கண்காட்சியை கொல்கத்தாவில் 2025 பிப்ரவரி 19, அன்று நிலக்கரி அமைச்சகம் நடத்த உள்ளது. இதில் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், சுரங்க நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். நாட்டின் நிலக்கரித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்கான தளமாக இக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க அரசின் சீர்திருத்தங்களை முன்னிலைப்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாக இருந்தது. இந்த நிகழ்ச்சி எதிர்வரும் வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள் குறித்த விரிவான விவரங்களை அளிக்கும். முதலீட்டுத் திறனைப் பற்றி விவாதித்தல், நாட்டின் வளர்ந்து வரும் நிலக்கரித் துறையில் பங்கேற்பதன் மூலம் ஏற்படும் நீண்டகாலப் பயன்களை எடுத்துரைப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நிலக்கரித் தொழில் உலகளவில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பிரிவில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குகிறது.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

