இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையொப்பமிடப்பட்டு 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. சி.இ.பி.ஏ என்பது ஒரு முழுமையான மற்றும் ஆழமான ஒப்பந்தமாகும், இது 18 பிப்ரவரி 2022 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்இடையே ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. இது மே 01, 2022 முதல் அமலுக்கு வந்தது.
ஒப்பந்தம் கையொப்பமிட்டதில் இருந்து, 2020-21 நிதியாண்டில் 43.3 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2023-24ல் 83.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருதரப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர், 2024), இது 71.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. 2023-24 நிதியாண்டில் எண்ணெய் அல்லாத வர்த்தகம் 57.8 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டதால், வர்த்தகத் துறையின் பல்வகைப்படுத்தலின் திறனை உணர்ந்து கொள்வதில் சி.இ.பி.ஏ வெற்றியடைந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு எண்ணெய் அல்லாத வர்த்தகத்தை USD 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கொண்டு செல்லும் இலக்குடன் இணங்கியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, எண்ணெய் அல்லாத ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் 27.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது சி.இ.பி.ஏ நடைமுறைக்கு வந்ததிலிருந்து சராசரியாக 25.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. துறை அளவில், சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் பொருட்கள் மற்றும் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண தயாரிப்புகள் தவிர, மின்னணு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கொதிகலன்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் உலைகள் மற்றும் கரிம மற்றும் கரிம ரசாயனங்கள் போன்ற இலகுரக மற்றும் நடுத்தர உயர் தொழில்நுட்ப பொருட்கள் முக்கிய சாதனை படைத்துள்ளன. தவிர, தயாரிப்பு மட்டத்தில், 2023-24 நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2.57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள திறன்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

