Saturday, December 06 2025 | 06:58:17 PM
Breaking News

மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார்

Connect us on:

சுற்றுலாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் (என்ஐபிசிசிடி) இந்தூர் வளாகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தலைமை தாங்கினார்.

மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையால் செயல்படுத்தப்பட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், நிர்பயா நிதியின் கீழ் நிதியளிக்கப்படும், பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 33 மாவட்டங்களில் 50 சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியிருக்கிறது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்தூர், உஜ்ஜைன், காண்ட்வா (ஓம்காரேஷ்வர்) மற்றும் கார்கோன் (மகேஷ்வர்) மாவட்டங்களில் திட்ட நடவடிக்கைகளின் அமலாக்கம் குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். மின்-ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், சாலையோர உணவு விற்பனையாளர்கள், மெஹந்தி கலைஞர்கள், நினைவு பரிசு தயாரிப்பாளர்கள், சுற்றுலா விற்பனை நிலையங்களில் விற்பனை உதவியாளர்கள், கதைசொல்லிகள், படகு ஓட்டும் பெண்கள், பராமரிப்பாளர்கள் உட்பட சுற்றுலா தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் பயனாளிகளுடன் அவர் நேரடியாக உரையாடினார்.

நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு உள்கட்டமைப்பு, சமூக பங்கேற்பு மற்றும் பிற அரசுத் துறைகளுடன் ஒன்றிணைக்கும் முயற்சிகளின் நிலையும் இந்தப் பயணத்தின்போது  மதிப்பீடு செய்யப்பட்டது. மகேஷ்வரில், திறன் பயிற்சி பெற்ற பிறகு, சுற்றுலா வசதி மையத்தின் கீழ் பணிபுரியும் பெண்களுடன் அவர் உரையாடினார்.

About Matribhumi Samachar

Check Also

மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – டிசம்பர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் …