பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்பு துறை, 2025 மே மாதத்திற்கான மாதாந்திர ‘செயலக சீர்திருத்தங்கள்’ அறிக்கையின் 22வது பதிப்பை வெளியிட்டுள்ளது. தூய்மைப் பணி, நிலுவையைக் குறைத்தல், முடிவெடுப்பதில் திறனை அதிகரித்தல், மின்-அலுவலகமயமாக்கல் அமல்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மாற்றத்தக்க ஆளுகை மற்றும் நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு நடைபெற்று வரும் முன்முயற்சிளில் விரிவான பகுப்பாய்வை இந்த அறிக்கை அளிக்கிறது.
தூய்மைப்படுத்துதல் மற்றும் நிலுவையைக் குறைத்தல்:
நாடு முழுவதும் 8,835 அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
சுமார் 3.5 லட்சம் சதுர அடி அலுவலக இடம் தூய்மைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவாக ரயில்வே அமைச்சகத்தில் 1,30,180 சதுர அடி நிலமும், நிலக்கரி அமைச்சகத்தில் 76,231 சதுர அடி நிலமும் அடங்கும்.
ரயில்வே, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் கனரக தொழில்கள் துறை போன்ற அமைச்சகங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன், பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.284.84 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
1,04,941 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 66,186 கோப்புகள் அகற்றப்பட்டன.
4,57,081 பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 1,448 குறிப்புகளுக்கும், மாநில அரசின் 320 குறிப்புகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
2025 மே மாதத்தில் மொத்த கோப்புகளில் 95.47 சதவீத கோப்புகள் மின்-கோப்புகளாக உருவாக்கப்பட்டன. முடிவெடுத்தலில் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
Matribhumi Samachar Tamil

