Wednesday, December 24 2025 | 12:40:56 AM
Breaking News

இந்தியா – ஓமன் இடையேயான கடல்சார் வர்த்தக உறவுகள் நூற்றாண்டுகால பழமை வாய்ந்தது: பிரதமர்

Connect us on:

இந்தியா – ஓமன் இடையேயான கடல்சார் வர்த்தக உறவுகள் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் மாண்ட்வி – மஸ்கட் இடையே வலுவான வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் இன்று நடைபெற்ற இந்தியா – ஓமன் வர்த்தக மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்நாட்டுடனான 70 ஆண்டுகால தூதரக உறவுகள் இருநாடுகளுடனான பழமையான நட்புறவையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான விரைவான பொருளாதார ஒத்துழைப்பின் வாய்ப்புகளை வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த ஒப்பந்தம் இருநாட்டு வர்த்தக மற்றும் முதலீடுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாகவும் பரஸ்பரம் வளர்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம், வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.  அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் கொள்கைக் கணிப்புகள் சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் முதலீட்டாளர்களின் அதீத நம்பிக்கை ஆகியவை இதற்கு உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் முந்தைய காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவிய போதிலும், இந்தியாவின் நெகிழ்வுத் தன்மை மற்றும் வலிமையான பாரம்பரியம் இதற்கு உறுதுணையாக உள்ளதென்று தெரிவித்தார்.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், சரக்குப் போக்குவரத்து,  நம்பகத்தன்மையுடன் கூடிய விநியோகச் சங்கிலிகள், போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகள், உற்பத்தித் திறன் மற்றும் பசுமை அடிப்படையிலான வளர்ச்சிப் பணிகளை விரைவாகவும், பெரிய அளவிலும் மேற்கொள்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இது போன்ற நடவடிக்கைகள் எளிமையான வாழ்வியல் முறைக்கும், வர்த்தகம் புரிதலை எளிதாக்குவதற்கும் உதவிடும் என்று அவர் கூறினார்.

எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ், உர உற்பத்தி போன்ற பாரம்பரிய வர்த்தகங்களைக் கடந்து பசுமை எரிசக்தி, சூரிய சக்தி பூங்காக்கள், எரிசக்தி சேமிப்பு, நவீன மின்வழித்தடங்கள், வேளாண் தொழில்நுட்பம், நிதிசார் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு, போன்ற துறைகளில் உள்ள ஏராளமான வாய்ப்புகளை ஓமன் நாட்டு வர்த்தகர்கள்  பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

About Matribhumi Samachar

Check Also

பிரதமர் நரேந்திர மோடி – சுல்தான் ஹைதம் பின் தாரிக் சந்திப்பு

அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மஸ்கட்டில் உள்ள ராயல் அரண்மனையில் அந்நாட்டின் சுல்தான் …