Wednesday, December 31 2025 | 11:30:09 AM
Breaking News

ஃபிட் இந்தியா ஞாயிறு சைக்கிளிங்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

Connect us on:

குருகிராமில் 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுபவர்களுடன் பிரபல நடிகை குல் பனாக்கும் அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீட்டி பூராவும்  ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ இயக்கத்தில் பங்கேற்றனர்.

கடந்த மாதம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவால் தொடங்கப்பட்ட இந்த  நாடு தழுவிய வாராந்திர சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வின் கருப்பொருளாக இன்று சாலை பாதுகாப்பு அமைந்தது.

“பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்துடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒரு அருமையான முயற்சி. போட்டி அரங்கங்களில் அதிக பதக்கங்களை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி ஃபிட் இந்தியா இயக்கம் என்று நான் நினைக்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் எளிதான முறையில் சைக்கிள் ஓட்டுதலுக்கு நேரம் ஒதுக்கலாம்” என்று குல் பனாக் கூறினார்.

பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் 80 க்கும் மேற்பட்டோர் கடும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் 11 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் நிகழ்வை நிறைவு செய்தனர்.

காந்திநகர் பிராந்திய மையத்தில், இந்தியா போஸ்டைச் சேர்ந்த 50 ரைடர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர். கொல்கத்தாவில் பீகார் ரெஜிமெண்டின் 15 வது பட்டாலியனைச் சேர்ந்த 50 பேர் சைக்கிள் ஓட்டினர்.

அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களிலும் ‘ஃபிட் இந்தியா சண்டே ஆன் சைக்கிள்’ நடத்தப்பட்டது.

இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (CFI), மை பாரத் தளம் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் (MYAS) ஃபிட் இந்தியா சண்டே சைக்கிளிங் (Fit India Sunday on Cycle) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

About Matribhumi Samachar

Check Also

விளையாட்டுகள் ஒழுக்கத்தை வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன– குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

விளையாட்டுகள் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக்ராவில் …