Monday, December 29 2025 | 10:45:13 AM
Breaking News

பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார்

Connect us on:

பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 20 பிற்பகல் 3 மணி அளவில், குவஹாத்தி செல்லும் பிரதமர், லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டடத்தைப் பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டடம் சுமார் 1.4 லட்சம் சதுரமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.3 கோடி பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 21 அன்று காலை 9.45 மணி அளவில், குவஹாத்தியின் போராகானில் உள்ள ஸ்வாஹித் சமாரக் க்ஷேத்ராவில் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துவார்.  இதன் பின் திப்ருகரில் உள்ள நாம்ரூப் செல்லும் அவர், அங்கு அமோனியா – யூரியா தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவார். இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்போரிடையே அவர் உரையாற்றுவார்.

இந்த உரத்தொழிற்சாலையின் முதலீடு ரூ.10,600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அசாம் மற்றும் அண்டை மாநிலங்களின்  உரத்தேவையைப் பூர்த்தி செய்வதோடு இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும். கணிசமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்கி பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்கும்.

‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :

https://matribhumisamachar.com/2025/12/10/86283/

आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:

https://www.amazon.in/dp/B0FTMKHGV6

यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक

About Matribhumi Samachar

Check Also

தேசிய வீரச் சிறார் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமரின் தேசிய வீரச் சிறார் விருதுகளை புதுதில்லியில் இன்று (26.12.2025) வழங்கினார். சமூக சேவை, …