தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களுக்கான தேசிய மாநாட்டை, ஐதராபாத்தில் இன்று (டிசம்பர் 19, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய குடியரசுத்தலைவர், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், அரசியலமைப்பின் ஒரு முழுப் பகுதியையும் பணியாளர் தேர்வு ஆணையங்களுக்காகவே அர்ப்பணித்துள்ளனர் என்று கூறினார். இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கான பணியாளர் தேர்வாணையங்களின் பங்கு மற்றும் செயல்பாடுகளுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
சமூகப் பொருளாதாரம், அரசியல் நீதி மற்றும் வாய்ப்புகளில் சமத்துவம் ஆகிய நமது அரசியலமைப்பு லட்சியங்கள், தேர்வாணையங்களின் செயல்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானவை என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
குடிமைப் பணிகளில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காகப் பணியாற்றும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். நமது குடிமைப் பணியாளர்கள் பெண்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் குறித்து குறிப்பாக உணர்வுடன் இருக்க வேண்டும்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாகவும், மகத்தான பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசமாகவும் இந்தியா இருப்பதால், அனைத்து மட்டங்களிலும் மிகவும் திறமையான ஆட்சி அமைப்புகள் தேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதை நோக்கியும் நாம் பயணித்து வருகிறோம். தேர்வாணையங்கள் தங்களின் பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றி, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழிநடத்தப்படும் எதிர்காலத்திற்குத் தயாரான குடிமைப் பணி அதிகாரிகளின் குழுவை உருவாக்குவதில் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

