
பொது மக்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அஞ்சல்துறையின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு நடைபயணம், உடற்பயிற்சி நிகழ்வு ஆகியவை நடைபெற்றன. இதனை அஞ்சல்துறையின் மத்திய மண்டல தலைவர் திருமதி டி நிர்மலா தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். உடற்பயிற்சி நன்மை குறித்து திருச்சி மாவட்ட அலுவலர் திருமதி ஓ ஞானசுகந்தி உரையாற்றினார்.

விழிப்புணர்வு நடைபயணத்தின் போது உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை அஞ்சல்துறை ஊழியர்கள் ஏந்தி சென்றனர். அத்துடன் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். இந்த நடை பயணத்தில் அஞ்சல்துறை அதிகாரிகள், தபால்காரர்கள், பன்முக திறன் பணியாளர்கள், ஊழியர்கள் உட்பட 160-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

