முன்னோட்டக் காலகட்டத்தின் இரண்டாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலாவது சுற்றில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் நாட்டின் 730-க்கும் அதிகமான மாவட்டங்களில் உள்ள முதன்மை நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான உள்ளகப் பயிற்சி இடங்கள் கிடைக்கும்.
எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, வங்கி மற்றும் நிதிச்சேவைகள், சுற்றுப்பயணம், விருந்தோம்பல், மோட்டார் வாகனத் தொழிற்சாலை, உலோகங்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள், வெகு வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமான முதன்மை நிறுவனங்களும், மற்றவையும் இந்திய இளைஞர்கள் நேரடி அனுபவத்தையும், தொழில் நிபுணர்கள் உடனான வலைப்பின்னலையும் வேலைவாய்ப்பைப்பெறுவதற்குத் தகுதி மேம்பாட்டையும் தர முன்வந்துள்ளன.
2-வது சுற்றில் இந்த உள்ளகப் பயிற்சிகளுக்குத் தேவையான கல்வித்தகுதிகள் அடிப்படையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் போன்வற்றில் உள்ளகப் பயிற்சி குறித்து 70-க்கும் அதிகமான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. உள்ளகப் பயிற்சி இடங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பல்வேறு தளங்கள் மூலம் தேசிய அளவில் டிஜிட்டல் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம் என்பது பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்திய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்த முதன்மை நிறுவனங்களின் 12 மாத நிதியுதவியுடன் உள்ளகப் பயிற்சி வழங்கப்படுகிறது. 21 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் இதற்குத் தகுதி பெற்றவர்களாவர். ஒவ்வொரு உள்ளகப் பயிற்சியாளருக்கும் மாதாந்தர நிதியுதவியாக ரூ. 5 ஆயிரமும், ஒருமுறை நிதியுதவியாக ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் https://pminternship.mca.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Matribhumi Samachar Tamil

