மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்தீப் குமார் பதக்கின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்தார். 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய பெருந்திட்டத்தை நவம்பர் 15, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மின்மயமாக்கல் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த அடிப்படை வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டங்கள் ஒன்பது அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 11 செயல்பாடுகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு அமைச்சகமும் அதற்கென ஒதுக்கப்பட்ட செயல்பாட்டை நிறைவேற்றும் பொறுப்புடையவையாகும்.
பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, பிரதமரின் விரைவு சக்தி திட்ட கைபேசி செயலி மூலம் இந்த திட்டத்தின் கீழ் கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு இடைவெளிகளை மதிப்பிடுவதற்காக, மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகம்/துறைகள் மூலம் பழங்குடியினர் விவகார அமைச்சகம் குடியிருப்புகள் அளவிலான தரவு சேகரிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மேலும், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, தகவல், கல்வியறிவு மற்றும் தொடர்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவை விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் ஆயுஷ்மான் சுகாதார அட்டை, பிரதமர் வீட்டு வசதி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்குத் தேவையான ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், மக்கள் வங்கிக் கணக்கு போன்ற அடிப்படை ஆவணங்களைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் இத்தகைய கிராமங்கள்/குடியிருப்புகளில் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான நடமாடும் மருத்துவ அலகுகளை திட்டம் வழங்கியுள்ளது. திட்டத்தின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றான பல்நோக்கு மையங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின கிராமங்கள்/குடியிருப்புகளுக்கு ஒரே கூரையின் கீழ் அங்கன்வாடி, சுகாதாரம் போன்ற பல சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சுய உதவிக்குழுக்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நெகிழ்வான விதிமுறைகளுடன் வனச் செல்வ மையங்ளை அமைப்பதன் மூலம் திட்டத்தின் கீழ் வாழ்வாதார செயல்திட்டம் நிவர்த்தி செய்யப்படுகிறது.
மாவட்டம் / தொகுதி அளவில் திட்டத்தின் கீழ் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை எளிதாக்குவதற்கு, மாவட்ட அளவிலான குழு மற்றும் தொகுதி அளவிலான செயல்படுத்தல் குழுவை திட்டத்தின் வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
Matribhumi Samachar Tamil

