Sunday, January 04 2026 | 09:22:34 PM
Breaking News

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2025 ஜனவரி 23 அன்று ஷில்லாங்கில் கால்நடை மாநாட்டை தொடங்கி வைக்கிறார்

Connect us on:

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது 2025 ஜனவரி 23-24 தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் “வடகிழக்கு இந்தியாவில் கால்நடைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான உரையாடல்” என்ற கருப்பொருளில் ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்  திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், தலைமை விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பஞ்சாயத்துராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். மேகாலயா முதலமைச்சர் திரு. கான்ராட் கே. சங்மா, வடகிழக்கு பிராந்திய மாநிலங்களைச் சேர்ந்த கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறைகளின் அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அர்ப்பணிக்கப்படும். வடகிழக்கு பிராந்தியத்தில் கால்நடைத் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக தொழில்துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் கால்நடை மற்றும் கோழியினத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான உத்திகளை விவாதிக்க சம்பந்தப்பட்டவர்களை ஒன்றிணைப்பது கால்நடை மாநாட்டின் நோக்கமாகும்.  தற்போதைய நிலை மற்றும் சவால்களை மதிப்பிடுதல், மதிப்புக் கூட்டுச் சங்கிலியை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப தலையீடுகள் மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவற்றின் மூலம் வளர்ச்சி, மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது ஆகியவை இந்த மாநாட்டின் நோக்கங்கள் ஆகும்.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, துறையின் உயர் அதிகாரிகள், வடகிழக்கு பிராந்திய மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்கள் ஆகியோரும் இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில் விஞ்ஞானிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் கால்நடை மற்றும் கோழியினத் தொழிலைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 125 சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்

குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம்  26.12.2025 அன்று விரிவான …