Saturday, December 06 2025 | 04:17:00 AM
Breaking News

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது

Connect us on:

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது. இது நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், கல்வி கற்பித்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கான ஒரு பத்தாண்டுக்கால இடைவிடாத முயற்சிகளைக் குறிக்கிறது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜனவரி 22)  நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே.பி.நட்டா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை, துணை ராணுவப் படைகள் மற்றும் தில்லி காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மேலும், துணைச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த பெண் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அத்துடன், மாணவிகள் (மை பாரத் தன்னார்வலர்கள்), அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் / பணியாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் யுனிசெஃப், ஐநா மகளிர், ஐநா மேம்பாட்டுத் திட்டம், ஐநா மக்கள் தொகை நிதி, உலக வங்கி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த 10-ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் 2025 ஜனவரி 22 முதல் மார்ச் 8 வரை நடைபெறும். இதேபோன்ற நிகழ்வுகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்படும். ஜனவரி 22, 26 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …