Friday, December 05 2025 | 06:55:32 PM
Breaking News

பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் யோகா தின கொண்டாட்டங்கள் – ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு

Connect us on:

ஜம்மு & காஷ்மீர், உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளையில் சுமார் 2,500 வீரர்களுடன் பல்வேறு ஆசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகளைச் செய்து 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு  ராஜ்நாத் சிங் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அவர் தமது உரையில், யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

 மக்களுக்கு யோகா தெளிவை அளிக்கிறது என அவர் கூறினார். அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்பவர்கள் தங்கள் உடல் மற்றும் மனதைக் கட்டுப்படுத்துகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் கட்டுப்பாட்டின் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு என்று விவரித்த திரு ராஜ்நாத் சிங், இந்த நடவடிக்கையின் போது இந்திய ஆயுதப் படைகள் கட்டுப்பாடு, சமநிலை மற்றும் துல்லியத்தைக் காட்டியதாகக் கூறினார். இது யோகா பயிற்சி செய்வதன் மூலம் வீரர்கள் அடைந்த உள் வலிமையின் பிரதிபலிப்பாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, வடக்கு கட்டளையின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசாகப்பட்டினத்தில் நடந்த முக்கிய நிகழ்வின் போது பிரதமர் நிகழ்த்திய உரையை பங்கேற்பாளர்கள் அனைவரும் நேரலையில் கண்டனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களின் சவாலான நிலப்பரப்பில் ஏராளமான இடங்களில் யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன. இது நமது வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தியது.

ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள கும்ஹாரியாவில் ஒரு பள்ளியில் நடந்த யோகா தின கொண்டாட்டங்களில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கலந்து கொண்டார். மாணவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் யோகா பயிற்சி செய்தனர். தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்கள் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகத்தில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினர்.

புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் 1,500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் யோகா தின நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …