Monday, December 22 2025 | 10:35:23 AM
Breaking News

நிலக்கரி இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

Connect us on:

நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் நிலையை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கடலோரத்தில் இல்லாத மின் உற்பத்தி நிலையங்களின் வருடாந்திர ஒப்பந்த அளவு 90% எனக் குறைக்கப்பட்டால் அல்லது  கடலோர மின் உற்பத்தி நிலையங்களின்  வருடாந்திர ஒப்பந்த அளவு 70% எனக் குறைக்கப்பட்டால்  தற்போதைய நெறிமுறை தேவையின் அடிப்படையில் வருடாந்திர ஒப்பந்த அளவு 100 சதவீதமாக அதிகரிக்கப்படுள்ளன. இது அதிக உள்நாட்டு நிலக்கரி வினியோகத்திற்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் நிலக்கரி இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை குறைகிறது.

2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத துறை ஏலக்கொள்கையில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, கோக்கிங் நிலக்கரி இணைப்பு கால அளவு 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இறக்குமதி சார்ந்த நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கரி இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையாக, நிலக்கரித்துறை அமைச்சகம் 29.5.2020 அன்று அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஒன்றை அமைத்துள்ளது. நிலக்கரி இறக்குமதியை கண்காணிக்கும் வகையில், இறக்குமதி தரவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நிலக்கரியை இறக்குமதி செய்யலாம் என்ற நிலை, 2020-ம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு வலைத்தளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகவும் அவசியமான நிலையைத் தவிர, வேறு எந்த நிலையிலும் நிலக்கரி இறக்குமதி மேற்கொள்ளப்படக்கூடாது என்பதை இது உறுதி செய்கிறது. உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

2024-25-ம் நிதியாண்டில் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த நிலக்கரியின் அளவு 243.62 மில்லியன் டன்னாக உள்ளது. இது 2023 24-ம் நிதியாண்டில் 264.53 மில்லியன் டன்னாக இருந்தது. சுமார் 20.91 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி குறைப்பு காரணமாக 2024–25-ம் நிதியாண்டில் சுமார் 60,681.67 கோடி ரூபாய் அந்நிய செலாவணி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நிலக்கரி தேவையில் பெரும்பகுதி உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2029–30-ம் நிதியாண்டில் 1.5 பில்லியன் டன் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி இலக்கை, நிலக்கரி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

இந்த தகவலை மாநிலங்கவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

அரசு கொள்முதலில் குறு, சிறு நிறுவனங்கள் பங்கேற்க அதிகாரமளிக்கும் அரசு மின் சந்தை தளம்

அரசு மின் சந்தை தளமான ஜிஇஎம் (GeM)-ன் மூலமாக குறு, சிறு நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் …