சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது.
முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கு இயக்குநர் திரு நச்சிகேதா ரவுட் விரிவாக விளக்கினார். இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு நிலைக்குழு உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நிறுவனத்தின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

