இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில் இன்று (24.01.2025) “புதிதாக பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை” நடத்தியது.
பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் மீனாட்சி கணேசன், உரிமைதாரர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும் தரத்தைப் பேணுவது குறித்தும் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும் அதைத் தொடர்ந்து அறிமுக தொகுப்பு (Welcome Kit) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உரிமம் பெற்றவர்கள் மற்ற புதிய உரிமம் பெற்றவர்களுடனும், பிஐஎஸ் அதிகாரிகளுடனும் தகவல் பரிமாற்ற வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி வழங்கியது .
சுமார் 45 உரிமதாரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

AFDC.jpeg)
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

