Tuesday, December 09 2025 | 01:28:51 PM
Breaking News

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார்

Connect us on:

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் திரு. விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பு மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் செயலாளர், உறுப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் வலுவான மன உறுதியையும், இந்திய ஆயுதப் படைகளின் வீரத்தையும் பாராட்டி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார், இது மத்திய மண்டல கவுன்சிலால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. தனது உரையில், மத்திய அமைச்சர், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் இலக்கை அடைவதில் மத்திய மண்டல கவுன்சிலின் உறுப்பு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறினார். உறுப்பு மாநிலங்களுக்கு இடையே எந்தப் பிரச்சினையும், சர்ச்சையும் இல்லாத ஒரே மண்டல கவுன்சில் மத்திய மண்டல கவுன்சில் என்றும், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அவர் கூறினார்.

2004 முதல் 2014 வரை மண்டல கவுன்சில்களின் 11 கூட்டங்களும், மண்டல கவுன்சில்களின் நிலைக்குழுக்களின் 14 கூட்டங்களும் மட்டுமே நடைபெற்ற நிலையில், 2014 முதல் 2025 வரை மொத்தம் 28 மண்டல கவுன்சில் கூட்டங்களும், 33 நிலைக்குழு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன – இது இரு மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது, என்றார் அவர். இந்தக் கூட்டங்களில் இதுவரை 1,287 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன, இது வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் ஊக்கமளிக்கிறது.

கிராம பஞ்சாயத்துகளின் வருவாயை அதிகரிக்கவும், இந்த நோக்கத்திற்காக விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் உறுப்பு மாநிலங்களை வலியுறுத்தினார். பஞ்சாயத்துகளின் வருவாயை அதிகரிப்பது இந்தியாவின் மூன்றடுக்கு ஜனநாயக பஞ்சாயத்து ராஜ் அமைப்பை மிகவும் பயனுள்ளதாக மாற்றும் என்று அவர் கூறினார். மண்டல கவுன்சிலின் அனைத்து மாநிலங்களும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதை உறுதி செய்ய வேண்டும், பள்ளியை விட்டு வெளியேறும் விகிதத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.