விளையாட்டுகள் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக்ராவில் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு விழாவில் தலைமை விருந்தினராக இன்று (24.12.2025) அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது பழங்கால தத்துவங்கள், நல்லிணக்கத்தையும் உடல் நலத்தையும் முக்கியமாக போதிப்பதாக அவர் கூறினார். விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நல்லிணக்கம் அதிகரிப்பதுடன் உடல்நலமும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டுகள் போட்டித்தன்மை உள்ளவை மட்டுமல்ல என்றும் அவை குழுமனப்பான்மை, நற்பண்புகள் போன்றவற்றை வளர்ப்பதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற தொகுதி அளவிலான விளையாட:டுப் போட்டிகள், அடித்தள நிலையில் உள்ள வீரர்களின் திறன்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்த உதவுவதாகத் தெரிவித்தார்.
உடல் திறன் இந்தியா, கேலோ இந்தியா போன்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அஸ்மிதா போன்ற முன்முயற்சிகளால் பெண்களிடையெ விளையாட்டு ஆர்வம் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் விளையாட்டுக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போதைப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் இளைஞர்கள் விளையாட்டில் முழு அளவில் ஈடுபட வேண்டும் என்றும் இதன் மூலம் வலுவான தேசத்திற்கு அடித்தளம் அமைக்க முடியும் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
Matribhumi Samachar Tamil

