
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அரசு இணைய சந்தையில் (GeM) எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்த பயிலரங்கை தகவல் மாளிகையில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (25.06.2025) நடத்தியது. இந்தப் பயிலரங்கில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம், டிடி தமிழ், ஆகாஷ்வாணி, வெளியீட்டுப் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு மத்திய அரசின் கொள்முதல் தளமான https://gem.gov.in/ ஜெம்(GeM)-ல் பொருட்கள் மற்றும் சேவைகளை எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான பயிற்சியாளர் திரு வெங்கடேஷ் பழநி செயல்முறை விளக்கமளித்தார். மேலும் இத்தளத்தில் உள்ள பல்வேறு வகையான கொள்முதல் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் திரு பி அருண்குமார், மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநர் திருமதி லீலா மீனாட்சி ஆகியோர் இப்பயிலரங்கில் கலந்துகொண்ட அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
Matribhumi Samachar Tamil

