Saturday, December 06 2025 | 12:35:45 AM
Breaking News

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச போதைபொருள் ஒழிப்புத் தினத்தை நாளை (ஜூன் 26-ம் தேதி) மத்திய அரசு கடைப்பிடிக்கிறது

Connect us on:

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நாளை (ஜூன் 26-ம் தேதி) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இதில் துறை சார்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், போதைப் பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் லட்சியத் திட்டமான போதைப் பொருள் ஒழிப்பு இயக்கத்தை தொடங்கி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதனை செயல்படுத்தி வருகிறது. இளைஞர்களிடையே போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் போதைப் பொருள் சட்ட விரோதமாக விற்கப்படுவதைக் கண்காணித்து  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது  மற்றும் சமூகத்தில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு உயர் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் ஒழிப்பு இயக்கத்தின் சாதனைகள்:

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் காரணமாக, 5.26 கோடிக்கும் அதிகமான  இளைஞர்கள் மற்றும் 3.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் உட்பட மொத்தம் 15.78 கோடிக்கும் அதிகமான மக்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

4.31 லட்சத்திற்கும் கூடுதலான கல்வி நிறுவனங்களின் பங்கேற்புடன், போதைப் பொருள் ஒழிப்பு இயக்கமானது நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சென்றடைவதை உறுதி செய்துள்ளது.

20,000-க்கும் அதிகமான தன்னார்வல சிறார்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போதைப் பொருள் ஒழிப்பு இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

About Matribhumi Samachar

Check Also

பொது கொள்முதல் குறித்து ஐடிஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் அமர்வு – அரசு மின் சந்தை தளம் சார்பில் நடத்தப்பட்டது

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மின் சந்தை தளம், பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு பயிற்சி …