Friday, December 05 2025 | 09:16:32 PM
Breaking News

அவசரநிலை பிரகடனம் என்பது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல- குடியரசு துணைத்தலைவர்

Connect us on:

50 ஆண்டுகளுக்கு முன் இந்த நாள் மிகவும் பழமையான, மிகப்பெரிய, துடிப்புமிக்க ஜனநாயகம் பிரச்சனைக்கு ஆட்பட்டது. அது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல. அதுதான் அவசர நிலை பிரகடனம். அந்த இரவு இருளானது. அமைச்சரவை ஓரம் கட்டப்பட்டது. உயர்நீதி மன்றத்தின் எதிர்மறை உத்தரவை எதிர்கொண்ட அன்றைய பிரதமர் சொந்த ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த தேசத்தையும் புறக்கணித்தார். அரசியலமைப்பை நசுக்கிய குடியரசுத் தலைவர் அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து சுமார் 22 மாதங்கள், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு  ஜனநாயகத்தின் கொந்தளிப்பான காலமாக இருந்தன என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள குமான் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே உரையாற்றிய அவர், அவசரநிலை காலத்தில் ஒரு லட்சத்து 40,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. அதிர்ஷ்டவசமாக அவசர நிலை இருந்தாலும், அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது என்று 9 உயர்நீதி மன்றங்கள் உறுதியாக தெரிவித்தன. துரதிருஷ்டவசமாக உச்சநீதி மன்றம் இருளால் சூழப்பட்டது. இந்த உயர்நீதி மன்றங்களின் தீர்ப்பை பொருட்படுத்தாமல் அவசரநிலை பிரகடனம் என்பது நிர்வாக முடிவாகும். அதனை, நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று, தீர்ப்பளித்தது. இது மக்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது என்றார்.

அரசியலமைப்பு படுகொலை தினம் இளைஞர்களுக்கு முக்கியமானது என்பதை சுட்டிக் காட்டிய குடியரசு துணைத்தலைவர், பத்திரிகை துறைக்கு என்ன நேர்ந்தது? சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் யார் என்பது பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். நாட்டின் இருண்ட காலத்தை அவர்கள் அறிந்துகொள்வது அவசியமாகும். இதற்காக, இந்த நாளினை அரசியலமைப்பு சட்ட படுகொலை தினமாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்தது. இத்தகைய நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பது இதற்கு காரணமாகும். உச்சநீதி மன்றத்திலும் கூட மாறுபட்ட தீர்ப்பை எழுதிய எச் ஆர் கன்னாவை அமெரிக்க முன்னணி செய்தி பத்திரிகை பாராட்டியது என்றும், அவர் தெரிவித்தார்.

ஒரு கல்வி நிறுவனத்திற்கு முன்னாள் மாணவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு தன்கர், வளர்ச்சியடைந்த உலகில் ஒரு சில கல்வி நிறுவனர்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முன்னாள் மாணவர்களின் தொகுப்புநிதியை பெற்றிருப்பதை நீங்கள் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இந்த மகத்தான கல்வி நிறுவனத்தின் ஒரு லட்சம் முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆண்டில் 10,000 ரூபாய் வழங்கினால் 100 கோடி ரூபாய் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு நிதி சேர்வதை கற்பனை செய்து பாருங்கள் இதன் மூலம் இந்த நிறுவனம் சுயசார்போடு இருக்க முடியும். மேலும், முன்னாள் மாணவர்களை இது ஒருங்கிணைக்கும் என்று கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …