Wednesday, January 07 2026 | 10:11:31 PM
Breaking News

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்

Connect us on:

இந்தோனேசியாவின் அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை  வரவேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி,  இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது என்றும்இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை  இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்த ஒரு சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது.

நாம் நமது  முதல் குடியரசு தினத்தை கொண்டாடும் போதுஇந்தோனேஷியா விருந்தினராக இருந்ததுஇப்போதுஇந்தியா குடியரசாகி 75 ஆண்டுகள் நிறைவடையும் போதுஅதிபர்  சுபியாண்டோ கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான  கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்களை நாங்கள் விவாதித்தோம்’’.

பாதுகாப்புபாதுகாப்பு உற்பத்திவர்த்தகம்நிதி நுட்பம் செயற்கை நுண்ணறிவு  மற்றும் பல துறைகளில் இந்தியா-இந்தோனேசியா உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். உணவுப் பாதுகாப்புஎரிசக்தி மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளிலும் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவதை  எதிர்பார்க்கிறோம்’’.

இந்தியாவும் இந்தோனேசியாவும் பல்வேறு பலதரப்பு தளங்களிலும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. இந்தோனேஷியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளதுஇந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினஃ பொறுப்பை  நாங்கள் வரவேற்கிறோம்’’.

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …