புதுச்சேரி யூனியன் பிரதேசம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் மூலம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பன்மொழி அணுகுலை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உரையை தமிழில் மொழிப்பெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் புதுச்சேரி பயன்படுத்தியுள்ளது.
2025 டிசம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வீரச் சிறார் தின நிகழ்சியில் ஆற்றிய உரை, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி அரங்கில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் உள்ளிட்டோரும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். பிரதமரின் உரையை உடனடியாக புரிந்து கொள்ளும் வகையில் பாஷினி செயற்கை நுண்ணறிவு தளத்தின் மூலம் அவரது இந்தி உரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இது அரங்கில் இருந்தவர்கள் பிரதமரின் உரையை உடனுக்குடன் எளிதில் புரிந்து கொள்ள உதவியது. இந்த நடவடிக்கையின் மூலம் பிரதமரின் உரை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ளப்பட்டதாக புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குநர் தெரிவித்தார்.
இந்த ஏற்பாட்டை செய்த பிரிவினருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குநர் திரு அமன் சர்மா வாழ்த்துத் தெரிவித்தார். மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பாஷினி மொழிப்பெயர்ப்புத் தளம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அதிநவீன மொழிப்பெயர்ப்புத்தளமாக விளங்குகிறது. இது மொழித்தடைகளை நீக்கி மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
Matribhumi Samachar Tamil

