Sunday, December 28 2025 | 04:11:47 AM
Breaking News

சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) விதிகள், 2025-ன் வரைவு அறிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது

Connect us on:

‘ஒரே நாடு, ஒரே நேரம்’ என்ற முறையை இலக்காகக் கொண்டு, துல்லியமான நேரத்தை நாடு முழுவதிலும் கடைபிடிக்கும் வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய நிலையான நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள ஐந்து  எடையளவு தொடர்பான சட்டமுறை ஆய்வகங்களிலிருந்து நேரத்தை கணக்கிடும் முறைக்கான  உள்கட்டமைப்பை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வழிகாட்டுதல் செயலி, தொலைத்தொடர்பு, மின் விநியோகம், வங்கி, டிஜிட்டல் நிர்வாகம், விண்வெளி வழிகாட்டுதல், ஈர்ப்பு அலை கண்டறிதல் உள்ளிட்ட அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளுக்கு இந்த கால அளவீடு முறையின் துல்லியமான கணக்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அனைத்து தொலைத்தொடர்பு சேவை, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்திய நிலையான நேரம் தொடர்பான கணக்கீடுகளை ஏற்றுகொள்வதில்லை.  இந்நிறுவனங்கள் ஜி.பி.எஸ் போன்ற வெளிநாட்டு நேர ஆதாரங்களை மட்டுமே நம்பியுள்ளனர். அனைத்து வலைத்தள சேவைகள், கட்டமைப்புகள் ஆகியவை  இந்திய நிலையான நேரத்துடன் இணைந்து தேசிய பாதுகாப்பு, நிகழ்நேர பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்.

பல்வேறு சவால்களை எதிர்கொள்ள, சட்டமுறை எடையளவு சட்டம், 2009-ன் கீழ் கொள்கை வடிவமைப்பு, ஒழுங்குமுறை, சட்ட விதிகள் ஆகியவற்றை உருவாக்க அமைச்சகங்களுக்கு இடையிலான உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையிலான இக்குழுவில் தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தகவல் மையம், இந்தியக் கணினி அவசரகால மீட்புக்குழு, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ரயில்வே, தொலைத்தொடர்பு, மற்றும் நிதி சேவைகள் போன்ற மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.

சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) விதிகள்-2025-ன் வரைவு விதிகள், நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சட்டமுறை எடையளவு பிரிவால் நாடு முழுவதும் இந்திய நிலையான நேரத்தை (IST) பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தும் ஒரு விதியாக வெளியிடப்படுகிறது.

About Matribhumi Samachar

Check Also

தேசிய வீரச் சிறார் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமரின் தேசிய வீரச் சிறார் விருதுகளை புதுதில்லியில் இன்று (26.12.2025) வழங்கினார். சமூக சேவை, …