Saturday, December 06 2025 | 12:15:12 AM
Breaking News

மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலமும் – சி-டாக் நிறுவனமும் இணைந்து டிஜிட்டல் திறன் இடைவெளியைக் குறைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன

Connect us on:

மேம்பட்ட டிஜிட்டல் திறன்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், கல்வி, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப அதற்கான தொழில்நுட்பத் திறன் அடிப்படையிலான  இடைவெளியைக் குறைப்பதற்கும் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம் – சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சி-டாக் இணைந்து டிஜிட்டல் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. சி-டாக் நிறுவனத்தின் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தேசிய அளவிலான நோக்கங்களை எட்டும் வகையில் இந்த கூட்டு நடவடிக்கை அமையும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புது தில்லியில் இன்று நடைபெற்ற டெக்- வெர்ஸ் 2025 என்ற நிகழ்ச்சியில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், இஆப மற்றும் சி-டாக் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு  இ. மகேஷ் ஆகியோரின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த உத்திசார் கூட்டாண்மை, டிஜிட்டல் தளத்திற்கான திறன் இடைவெளியைக் குறைப்பதையும் திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டப் பணிகளுடன் இணைந்து வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி மாநிலங்களில்  உள்ள மெட்ராஸ் ஏற்றுமதி செயல்பாட்டு மண்டலம் – சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பணிபுரியும் பன்முகத் திறன் மேம்பாட்டை மேம்படுத்த உதவிடும்.

உயர் செயல்திறன் கொண்ட கணினி, செயற்கை நுண்ணறிவுத் தொழல்நுட்பம், இணையவழி சிந்தனை, ட்ரோன் தொழில்நுட்பங்கள், குவாண்டம் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நடைமுறைகள், நேரடிப் பயிற்சிகள் ஆகியவற்றை வழங்குவதற்கு இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பிரத்யேக தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் நிறுவப்படும். இது தேவைக்கேற்ப டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சி – டாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி. சுதர்சன், “இந்த கூட்டாண்மை அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளின் வலிமையை மெட்ராஸ் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தொழில்துறை தளத்துடன் இணைப்பதன் மூலம் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய தொழில்நுட்பத் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்கான உத்திசார் நடவடிக்கையாகும் என்று கூறினார்.

தொழில்நுட்ப பயிற்சிக்கு கூடுதலாக, சிறப்புப் பொருளாதார மண்டல பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும். இது வளர்ந்து வரும் தொழில்துறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய பணியாளர்களை வழங்க உதவிடும். இந்த முயற்சி பிராந்தியம் முழுவதும் உள்ளடக்கிய, புதுமை சார்ந்த தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மெட்ராஸ் ஏற்றுமதி செயல்பாட்டு மண்டலம் – சிறப்புப் பொருளாதார மண்டலத்தின், மண்டல மேம்பாட்டு ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன், இஆப, , சி-டாக் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் திறன் மேம்பாட:டு பயிற்சியை வழங்குவதுடன் முக்கியத்துவம் வாய்ந்த திறமைகளை பணியாளர்கள் வளர்த்துக் கொள்வதற்கான படிநிலையாகும் என்று கூறினார். டிஜிட்டல் திறன் கொண்ட நிபுணர்களுக்கான முன்னணி மையமாக தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரி பிராந்தியங்களில் இந்த திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது: பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் …