Thursday, February 05 2026 | 03:39:10 AM
Breaking News

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைதீர்க்கும் பணிகளை விரைவுபடுத்த பயணிகளுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது

Connect us on:

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையிலும், வழித்தட எண்ணிக்கையிலும் பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டு வந்தாலும், விமான தாமதங்கள், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள், பொருள்கள் தொடர்பான சிக்கல்கள், நெரிசல், நீண்ட வரிசை, நெரிசல் மிகுந்த காலங்களில் போதுமான வசதிகள் இல்லாதது போன்ற தொடர்ச்சியான சவால்களையும் ஏற்படுத்தியது. பயணிகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த  பதில் செயல்முறை அவசியம்.

இந்த தேவைகளை உணர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிரந்தரமாக 24 மணி நேரமும் செயல்படும் பயணிகளுக்கான உதவி கட்டுப்பாட்டு அறையை நிறுவ முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 03, 2025 முதல் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திரு சமீர் குமார் சின்ஹா, இந்த மையத்தை தினமும் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்து, பயணிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறார்.  குறைகளைத் தீர்ப்பதில் வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …