Monday, December 08 2025 | 09:47:23 PM
Breaking News

மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மண்டவியா, திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Connect us on:

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மை பாரத் தளம் தற்போது மை பாரத் 2.0 ஆக மேம்படுத்தப்படுகிறது. இதில், பயனர் அனுபவம், அணுகல், செயல்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன. கட்டமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தி மை பாரத் தளம் முழுமையாக மீண்டும் கட்டமைக்கப்படும். கூடுதலாக, ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தொழில்நுட்பங்கள் மூலம் மொபைல் பயன்பாடுகளும் உருவாக்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரே தீர்வாக மை பாரத் அமைப்பைக் கருதியதாக தெரிவித்தார். மை பாரத் 2.0 என்பது, இளைஞர்களை, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுடன் இணைக்கும் ஒற்றை சாளர டிஜிட்டல் சூழல் சார் அமைப்பு என்றும் அவர் கூறினார். ஏற்கனவே 1.75 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் இணைந்த இந்த தளம், வெறும் டிஜிட்டல் கருவி மட்டுமல்ல, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நோக்கத்துடன் இளைஞர்களின் விருப்பங்களை இணைப்பதற்கான ஒரு இயக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மை பாரத் 2.0 மூலம், இளைஞர்களின் விருப்பங்களை தேசிய பாரதத்தின் அடித்தளமாக மாற்றும் வகையில் சிறந்த ஒருங்கிணைப்பு, ஆழமான ஒத்துழைப்பு மற்றும் ஒரு துணிச்சலான புதிய திசையை நோக்கி நாங்கள் முன்னேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்கள் தலைவர்களாகவும் தேசத்தைக் கட்டி எழுப்புபவர்களாகவும் உள்ளனர்  என்று கூறினார்.  கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இளைஞர்களுக்காக விளையாட்டு, தொழில்நுட்பம், கல்வி உட்பட பல்வேறு துறைகளை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”