சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) நிறுவிய நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையமும் அக்செஞ்சர் நிறுவனமும் சிறப்புத் திறன்மிகு திட்டங்களை வழங்க இணைந்து செயல்படுகின்றன. அக்செஞ்சரின் மென்பொருள் சார்ந்த வாகன அகாடமியான லேர்ன்வான்டேஜ் மூலம் இந்த திறன்மிகு திட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த முயற்சி, மென்பொருள்-சார்ந்த வாகனங்களை உருவாக்குவதற்கான திறமையை வளர்க்க விரும்பும் ஆட்டோமோடிவ் ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. திறமையான நிபுணர்களுக்கான வளர்ந்துவரும் தேவையை பூர்த்தி செய்வதையும், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள், மின்/மின்னணு கட்டமைப்பு, இணைப்பு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகளை உருவாக்கத் தேவையான டிஜிட்டல் திறன்கள் ஆகியவற்றின் மூலம் பாரம்பரிய வாகன வடிவங்களுக்கும், தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்துக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கவும் உதவுகிறது..
ஆட்டோமோடிவ் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில், இந்த துறை பற்றிய தொகுதிகள், கலந்துரையாடும் கற்றல் சூழல்கள் மற்றும் சுய-வேக மற்றும் ஐஐடி மெட்ராஸ் பயிற்றுவிப்பாளர் தலைமையிலான அமர்வுகள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் நிபுணர் பயிற்சி ஆகியவை அடங்கும்.
அக்செஞ்சர் ஆராய்ச்சி மதிப்பீட்டின்படி, மென்பொருள் சார்ந்த டிஜிட்டல் சேவைகள் சந்தை வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும், உலகளாவிய மோட்டார் வாகனத் துறை வருவாயில் 40% பங்கைக் கொண்டிருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு குறித்துப் பேசிய அக்செஞ்சரின் லேர்ன்வான்டேஜ் உலகளாவிய தலைவர், “வாகனங்கள் அதிநவீன மென்பொருள்-சார்ந்த இயந்திரங்களுக்கு மாறும்போது, வாகனத் துறைக்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் திறமையான டிஜிட்டல்முறை சார்ந்த திறமையாளர்கள் தேவைப்படுகின்றனர். ஐஐடி மெட்ராஸ் உடனான தங்களது ஒத்துழைப்பு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்று கூறினார்.
Matribhumi Samachar Tamil

