ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி நகரில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. தில்லியில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிகள், பொதுப் போக்குவரத்து பகுதிகள் மற்றும் அதிவிரைவு முனையங்கள் போன்றவற்றில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.
2025 நவம்பர் 11 முதல் 13 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 180 கிலோமீட்டர் நகர்ப்புற பகுதியும், 6 நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களும் அடங்கும்.
2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று சோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி ஆகியவற்றின் தொழில்நுட்ப செயல்பாடு குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இந்த சோதனைகளின் விரிவான அறிக்கை www.trai.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. விரிவான விவரங்களை அறிய தில்லி பிராந்திய அலுவலக ஆலோசகர் திரு விவேக் காரேயை [email protected] என்ற மின்னஞ்சலில் அல்லது +91-11-20907772 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Matribhumi Samachar Tamil

