Sunday, January 04 2026 | 07:08:57 PM
Breaking News

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Connect us on:

“ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள்” என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி,  2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார்.

இந்தக் கண்காட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீட்டுக் கொண்டுவரப்பட்ட பிப்ரவா நினைவுச்சின்னங்களை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கொல்கத்தாவின் இந்திய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்ட பிப்ரவாவைச் சேர்ந்த உண்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுடன் முதல்முறையாக ஒன்றிணைக்கிறது.

இந்தக் கண்காட்சி கருப்பொருள் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மையத்தில் சாஞ்சி ஸ்தூபியால் ஈர்க்கப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்ட மாதிரி ஒன்று உள்ளது. இது தேசிய சேகரிப்புகளிலிருந்து உண்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் திருப்பி கொண்டுவரப்பட்ட ரத்தினங்களை ஒன்றிணைக்கிறது. பிற பிரிவுகளில் பிப்ரவா மறுபார்வை, புத்தரது வாழ்க்கைக் காட்சிகள், தொட்டுணரக்கூடியவற்றில் அருவமானவை: பெளத்த போதனைகளின் அழகியல் மொழி, எல்லைகளுக்கு அப்பால் பெளத்த கலை மற்றும் சிந்தனைகளின் விரிவாக்கம், திருப்பி கொண்டுவரப்பட்ட கலாச்சார கலைப்பொருட்கள்: தொடர்ச்சியான முயற்சி ஆகியவை அடங்கும்.

பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதற்காக, இந்தக் கண்காட்சி, ஆழமான திரைப்படங்கள், டிஜிட்டல் முறையிலான புனரமைப்புகள், விளக்கக் காட்சிகள், பல்லூடக விளக்கங்கள்  உட்பட விரிவான ஒலி -ஒளிக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்தக் கூறுகள் பகவான் புத்தரின் வாழ்க்கை, பிப்ரவா நினைவுச்சின்னங்களின் கண்டுபிடிப்பு, பிராந்தியங்கள்தோறும்  அவற்றின் இயக்கம், அவற்றுடன் தொடர்புடைய கலை மரபுகள் பற்றி அணுகுதற்குரிய  செறிவான கருத்துகளை வழங்குகின்றன.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …