Thursday, January 09 2025 | 09:58:49 AM
Breaking News

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 67-வது நிறுவன தினத்தையொட்டி மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்

Connect us on:

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஜனவரி 02 ) புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமையகத்திற்குச் சென்று, 67-வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஆயத்தப்படுத்துவதன் மூலம் நாட்டின் உள்நாட்டு திறன்களை மேம்படுத்தியதற்காகவும், தனியார் துறையுடனான ஒத்துழைப்பின் மூலம் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தியதற்காகவும் பாராட்டினார்.

2025 ஆம் ஆண்டு ‘சீர்திருத்தங்களின் ஆண்டாக’  அறிவிக்கப்பட்டுள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  முக்கியப்  பங்கு வகிக்கும் என்று அமைச்சர் கூறினார். விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்ற உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகள் பின்பற்றும் தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை விஞ்ஞானிகள் கவனித்து தமக்கேற்றாற்போல உருவாக்க வேண்டும் என்றும், இந்த அமைப்பை உலகின் வலுவான ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்புகளில் ஒன்றாக மாற்றும் நோக்கத்துடன் முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வின் போது நீண்ட தூர ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வடிவமைத்த குழுவினரையும் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். பாதுகாப்பு ஆராய்ச்சி  மேம்பாட்டு நிறுவனம் ஆண்டு தோறும் ஜனவரி 1 ஆம் தேதியை தனது நிறுவன நாளாகக் கொண்டாடுகிறது.

About Matribhumi Samachar

Check Also

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற வகையில் தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது: மக்களவைத் தலைவர்

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, பாரபட்சமற்ற வகையில் தேர்தல்களை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் …