Monday, December 22 2025 | 01:52:23 AM
Breaking News

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொழில் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவை, தொழில் நகரங்களில் வர்த்தகங்களை மேம்படுத்த சலுகையில் நிலம் ஒதுக்க விருப்பம்: திரு பியூஷ் கோயல்

Connect us on:

நாடு முழுவதும் 20 நகரங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலங்களை ஒதுக்க அரசு தயாராக உள்ளது. எம்.எஸ்.எம்.இ.க்கள் பெரிய வணிகங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவையாகும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற அசோசெம்: பாரத் @100 உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தங்கள் சூழல் அமைப்பில் பெரிய தொழில்களை ஆதரிப்பதில் முக்கியமானவையாக உள்ளன என்று கூறிய அமைச்சர், நகரியங்கள் மற்றும் தொழில்துறை பூங்காக்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான பகுதிகளை வழங்குவது குறித்து மாநிலங்களுடன் பேசப்போவதாக தெரிவித்தார். எம்.எஸ்.எம்.இ.க்கள் டவுன்ஷிப்களில் தங்கள் வணிகங்களை மேம்படுத்த சலுகை விலையில் நிலம் வழங்கலாம் என்றும் அவர் கூறினார்.

“இந்தியாவின் உலகளாவிய எழுச்சியைத் தூண்டுதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டின் மையக்கருத்தில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ‘ஐந்து உறுதிமொழி– வளர்ந்த இந்தியா, காலனிய மனப்பான்மையை அகற்றுதல், நமது பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் பெருமிதம் கொள்ளுதல், தேசத்திற்கான கூட்டுக் கடமை ஆகியவற்றை பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினார். காலனித்துவ சகாப்த சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் கொதிகலன்கள் மசோதா, 2024 மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு கோயல், தற்போதைய அரசின் கீழ் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல், இணக்க சுமையைக் குறைத்தல் மற்றும் நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் சட்டங்களை குற்றமற்றதாக்குதல் ஆகியவற்றின் மூலம் எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் அதிகரித்து வரும் நுகர்வு முறைகள் குறித்து பேசிய அமைச்சர், நிலைத்தன்மையின் பின்னணியில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டார். வீண் விரயங்களை ஊக்குவிக்க முடியாது என்றார். தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய திரு கோயல், வளர்ந்த நாடுகள் தங்கள் உற்பத்தியை பிற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பாதிப்பை வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் தாங்க வேண்டியுள்ளது என்று கூறினார். கார்பன் உமிழ்வுக்கு உற்பத்தியாளரைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இது நுகர்வுடன் நேரடியாக தொடர்புடையது.100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களால் வழங்கப்பட்ட குறைந்த விலையிலான ஆற்றலின் பின்னணியில் ‘வளர்ந்த’ குறிச்சொல் கொண்ட நாடுகள் தங்கள் பொருளாதாரங்களை தொழில்மயமாக்கியதால் அந்த அந்தஸ்தை அடைந்தன என்று அவர் மேலும் கூறினார். அதேசமயம், இந்தியா பல தசாப்தங்களாக இயற்கையை மதிப்பதுடன் வளர்ந்த நாடுகளை விட ஒரு வட்ட பொருளாதாரத்தை முன்பே உணர்ந்துள்ளது என்று திரு கோயல் வலியுறுத்தினார்.

உணவுப் பாதுகாப்பு, தண்ணீர், மின்சாரம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு ஆகியவற்றில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசிய திரு கோயல், இந்தத் திட்டங்கள் மதம், சாதி மற்றும் இன அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் குடிமக்களுக்கு வழங்கப்படுகின்றன என்றார். சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவது அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.  இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கான உந்துதல் ஒவ்வொரு சேவை வழங்குநரையும் வேலைகளை மிகவும் திறமையாக செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், ஊழல் மற்றும் செயல்முறைகளில் தாமதங்களுக்கு எதிராக குடிமக்கள் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.

திறன் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்க அரசு தயாராக உள்ளது என்று குறிப்பிட்ட திரு கோயல், ஏற்கனவே ரூ .2 லட்சம் கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த முயற்சி பொது-தனியார் கல்வி கூட்டாண்மையில் இயக்கப்பட வேண்டும் என்று கூறினார். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்முனைவோர் திட்டத்தை கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவை எடுத்துரைக்கும் வகையிலான கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்

வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மேம்பாட்டிற்கான திட்டமிடல் பணிகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார வசதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அந்தக் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு அளிப்பதிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது. சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் எழுதிய கட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது; “அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு @ChouhanShivraj, வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் திட்டமிடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றை  சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில், வாழ்வாதார வசதிகளில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.”