Friday, January 10 2025 | 02:03:37 AM
Breaking News

கிராமப்புற பாரத திருவிழா 2025-ஐ பிரதமர் ஜனவரி 4 –ம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025- ஐ தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா ஜனவரி 4 முதல் 9 வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும்.

இத்திருவிழாவில் விவாதங்கள், பட்டறைகள், பயிற்சி வகுப்புகள் மூலம், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தற்சார்பு பொருளாதார நிலையை உருவாக்குதல், கிராமப்புற சமூகங்களிடையே புதுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் சிறப்பு கவனம் செலுத்தி, கிராமப்புற மக்களிடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி பாதுகாப்பை ஊக்குவித்தல், நிதி உள்ளடக்கம், நிலையான விவசாய நடைமுறைகளை செயல்படுத்துதல் மூலம் இதன் குறிக்கோள்களை எட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும்.

தொழில்முனைவோர் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாக இருக்கும். அரசு அதிகாரிகள், வழிகாட்டும் தலைவர்கள், கிராமப்புற தொழில்முனைவோர், கைவினைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஒன்றிணைத்து கிராமப்புற மாற்றத்திற்கான வரைபடத்தை உருவாக்குதல்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பம், புதுமையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்களை ஊக்குவித்தல், கண்காட்சிகள்  ஆகியவை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

About Matribhumi Samachar

Check Also

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு …