நீர்மூழ்கி தொலைத்தொடர்பு கேபிள்கள் உலகளாவிய தகவல்தொடர்புகளின் முதுகெலும்பாகும். இது சுமார் 99% இணைய போக்குவரத்தைக் கொண்டுள்ளது. வர்த்தகம், நிதி, அரசு நடவடிக்கைகள், டிஜிட்டல் சுகாதாரம், கல்வி போன்ற முக்கியமான சேவைகளை வலுப்படுத்த இது உதவுகிறது. இந்த கேபிள்கள் சேதமடையக் கூடியவை. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 150 முதல் 200 வரை பிழைகள் நிகழ்கின்றன. மீன்பிடித்தல், நங்கூரமிடுதல், இயற்கை அபாயங்கள், உபகரணங்கள் செயலிழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் கேபிள்களுக்கு சேதம் ஏற்படுகிறது.
வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கும், இந்த முக்கியமான உள்கட்டமைப்பின் வலுவான தாங்கு திறனை உறுதி செய்வதற்கும், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியமும் சர்வதேச கேபிள் பாதுகாப்புக் குழுவும் இணைந்து நீர்மூழ்கி கேபிள் வலுப்படுத்தலுக்கான சர்வதேச ஆலோசனைக் குழுவைத் தொடங்கியுள்ளன. உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கு அவசியமான நீர்மூழ்கி கேபிள்களின் தாங்கு திறனை வலுப்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூத்த வல்லுநர்கள் உட்பட உலகெங்கிலும் இருந்து 40 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு ஒரு மாறுபட்ட உலகளாவிய செயல்பாட்டைக் கொண்டதாகும். உறுப்பினர்கள் அனைத்து பகுதிகளிலிருந்தும் இடம் பெற்றுள்ளனர்.
ஆலோசனைக் குழுவுக்கு நைஜீரியாவின் தகவல் தொடர்பு, டிஜிட்டல் பொருளாதாரத் துறை அமைச்சர் அமைச்சர் போசுன் டிஜானியும், போர்ச்சுகலின் தேசிய தகவல் தொடர்பு ஆணைய இயக்குநர் குழுவின் தலைவர் பேராசிரியர் சாண்ட்ரா மாக்சிமியானோ ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.