Wednesday, January 08 2025 | 10:14:50 AM
Breaking News

அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்

Connect us on:

சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வான சிறந்த சூஃபி துறவியை நினைவுகூரும் ஆண்டு உர்ஸ் என வழங்கப்படுகிறது.

இந்தப் புனிதமான விளக்கக்காட்சியுடன் இணைந்து, தர்காவிற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் அனுபவத்தையும் வசதியையும் மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை அமைச்சர் வெளியிட்டார். உர்ஸிற்கான செயல்பாட்டுக் கையேட்டின் வெளியீடு, அதிகாரப்பூர்வ தர்கா இணையப் போர்ட்டலைத் தொடங்குதல் மற்றும் “கரிப் நவாஸ்” செயலியின் அறிமுகம் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும்.

உர்ஸிற்கான செயல்பாட்டுக் கையேடு, கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான விரிவான நெறிமுறைகளுடன், நிகழ்வின் திறம்பட ஒழுங்கமைப்பை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான வழிகாட்டியாகும்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு ரிஜிஜு, “குவாஜா மொய்னுதின் சிஷ்டியின் உர்ஸ் என்பது நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும். இந்தப் புதிய முயற்சிகள் மூலம், தடையற்ற  நிகழ்வின் புனிதத்தை நிலைநிறுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். பக்தர்களுக்கு இது செழுமையான அனுபவமாக இருக்கும்” என்று கூறினார்.

தர்கா கமிட்டி, தர்கா குவாஜா சாஹேப் நடத்திய நிகழ்வில், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை  அமைச்சர் திரு பகீரத் சவுத்ரியும் கலந்து கொண்டார்.

இந்த முன்முயற்சிகள் குவாஜா கரிப் நவாஸின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டைப்  பிரதிபலிக்கின்றன.  அதே நேரத்தில் யாத்ரீகர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யும் வகையில்,  தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தழுவுகின்றன.

About Matribhumi Samachar

Check Also

குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ்களை வழங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் பங்களிப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில்  சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள்,  அரசுத் திட்டத்தின்  பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை …