Friday, January 10 2025 | 01:17:01 PM
Breaking News

அகில இந்திய வானொலியின் சிறப்பு ‘கும்பவாணி’ அலைவரிசை, ‘கும்ப மங்கல்’ த்வனியை நாளை பிரயாக்ராஜில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்

Connect us on:

மகா கும்பமேளா 2025-க்கு என்று சிறப்பு ஏற்பாடாக அகில இந்திய வானொலியின் சிறப்பு கும்பவாணி அலைவரிசையை (எஃப்எம் 103.5 மெகாஹெர்ட்ஸ்) பிரயாக்ராஜில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்  காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியின் போது, கும்ப மங்கள் த்வனியையும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.

இந்த நிகழ்ச்சியில் பிரசார் பாரதி தலைவர் டாக்டர் நவ்னீத் குமார் சேகல், தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் துவிவேதி, அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குநர் டாக்டர் பிரக்ஞா பாலிவால் கவுர், தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் ஜெனரல் கஞ்சன் பிரசாத் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கும்பவாணி ஒலிபரப்பு உடனுக்குடன் தகவல்களை அறிய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இந்த வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளாவின் சூழ்நிலையை நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்ல உதவும். நாட்டின் பொது சேவை ஒலிபரப்பாளரான பிரசார் பாரதி, இந்தியாவின் வரலாற்று சமய மரபுகளுக்கு மட்டுமின்றி, பக்தர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களின் வீடுகளில் இருந்து கலாச்சார அனுபவத்தைப் பெறுவதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கும்பவாணி அலைவரிசையின் ஒலிபரப்பு காலம் 2025 ஜனவரி 10, முதல் 2025 பிப்ரவரி 26 வரை, ஒலிபரப்பு நேரம் காலை 5.55 மணி முதல் இரவு 10.05 மணி வரை,  அலைவரிசை எண் எஃப்எம் 103.5 மெகா ஹெர்ட்ஸ்

இந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதில்பொது ஒலிபரப்பாளராக அகில இந்திய வானொலி எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2013-ம் ஆண்டில் நடைபெற்ற கும்பமேளா மற்றும் 2019-ம் ஆண்டில் நடைபெற்ற அர்த் கும்பமேளா ஆகியவற்றின் போது கும்பவாணி சேனல் நேயர்களிடையே பிரபலமடைந்தது. இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த சிறப்பு அலைவரிசை 2025 மகா கும்பமேளாவுக்காக மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

திருச்சி என்ஐடி-யில் ஆறு நாள் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, செயல் மாதிரியாக்கம், உருவகப்படுத்துதல் மற்றும் செயலாக்கக் கட்டுப்பாட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆறு நாள் ஏ.ஐ.சி.டி.இ. அடல் ஆன்லைன் ஆசிரியர் …