திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, செயல் மாதிரியாக்கம், உருவகப்படுத்துதல் மற்றும் செயலாக்கக் கட்டுப்பாட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆறு நாள் ஏ.ஐ.சி.டி.இ. அடல் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் இத்துறைகளில் பேராசிரியர்கள் தங்களின் அறிவுத் திறன்களை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதிலுமிருந்து 14 மாநிலங்களைச் சேர்ந்த 140 பங்கேற்பாளர்களை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் அறிவுத்திறனைப் பகிர்ந்துகொள்ள ஒன்று கூடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த எஃப் டி பி -யில் இந்தியாவிலிருந்து 10 சிறந்த பேச்சாளர்கள் மற்றும் கனடா மற்றும் ஸ்பெயினிலிருந்து 2 சர்வதேச நிபுணர்களைக் கொண்ட 13 தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டுள்ளது.
திட்ட ஒருங்கிணைப்பாளர், வேதியியல் பொறியியல் துறை, பேராசிரியர் (முனைவர்) டி. கே. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். என்.ஐ.டி. திருச்சியின் இயக்குநர் பேராசிரியர் (முனைவர்) ஜி. அகிலா, வேதியியல் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் எம்.அறிவழகன், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், ஆய்வு மாணாக்கர்கள், ஆசிரியப்
பெருமக்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து வருகை தந்த பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் (முனைவர்) எம்.அறிவழகன், தங்கள் துறை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து அறிமுக குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
வேதியியல் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் கே. சங்கர் நன்றி கூறினார்.