மெகா எண்ணெய் பனை தோட்ட இயக்கம், 2024 ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. 17,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 25 லட்சம் நடவுப்பொருட்கள் 15,755 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சாத்தியமான பகுதிகளில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்படும் பகுதிகள்.
அரசு திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை வளர்ப்பு பொருத்தமான வேளாண் காலநிலை நிலைமைகளைக் கொண்ட சாத்தியமான பகுதிகளில் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, எண்ணெய் பனை சாகுபடி நிலத்தடி நீர் இருப்பை மோசமாக பாதிக்காது. மேலும் வாழை, கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த நீரே தேவைப்படுகிறது. மேலும், நீரை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக எண்ணெய் பனை நடவுடன் சொட்டு நீர் பாசனத்தையும் அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும், எண்ணெய் பனை இலைகள் மற்றும் காலி பழக் குலைகள் வடிவில் அதிக உயிர்ப்பொருளை உற்பத்தி செய்வதால் மண் வளம் பாதிக்கப்படுவதில்லை, இதனால் மண் வளத்தை மீண்டும் பெற உதவுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.