Friday, December 12 2025 | 12:18:50 AM
Breaking News

குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா விரிவாக்க கட்டிடத்தை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா திறந்து வைத்தார்

Connect us on:

1154 சதுர அடி பரப்பளவில் ரூ. 43.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்கப்பட்ட குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கட்டிடத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும்  வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு  ஜோதிராதித்ய எம்.சிந்தியா ஜனவரி 11, 2025 அன்று திறந்து வைத்தார். அஞ்சல் துறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தொழில்நுட்ப அடிப்படையிலான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் துறையின் முழுமையான தொழில்நுட்ப அடிப்படை நவீனமயமாக்கல் உள்ளிட்ட வரவிருக்கும் திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கினார். தபால் துறையின் முக்கியத்துவத்தை விளக்கிய மத்திய அமைச்சர், கடந்த 2008-ஆம் ஆண்டு மாநில அமைச்சராக இருந்தபோது தபால் துறையை மாற்றியமைத்ததைக் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேச அரசின் உணவு, பொது விநியோகம்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரும், குணாவின் பொறுப்பு அமைச்சருமான திரு. கோவிந்த் சிங் ராஜ்புத்,  குணா சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னாலால் ஷக்யா, மத்தியப் பிரதேச அஞ்சல் வட்டத்தின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு வினீத் மாத்தூர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தியா போஸ்ட்டின் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை, பரந்த அஞ்சல் வலையமைப்பைப் பயன்படுத்தி, அத்தியாவசிய சேவைகளை குடிமக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது. புதிய கட்டிடத்தின் விரிவாக்கம், தடையற்ற மற்றும் திறமையான குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை உறுதி செய்யும், குடியிருப்பாளர்கள் தங்கள் தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்கும் தேவையைக் குறைக்கும்.

About Matribhumi Samachar

Check Also

பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்தியா-புருனே இடையே கூட்டு பணிக்குழுக் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இந்தியா-புருனே இடையே கூட்டு பணிக்குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 09, 2025) புது தில்லியில் …