Monday, December 08 2025 | 09:24:01 AM
Breaking News

தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது: பிரதமர்

Connect us on:

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், உள்கட்டமைப்பில் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா (@JM_Scindia) விரிவாகக் கூறியுள்ளார். தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மஹோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.”

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.