Tuesday, December 09 2025 | 12:47:56 PM
Breaking News

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான அரசு முறை இத்தாலி பயணத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கியுள்ளார்

Connect us on:

இத்தாலிக்கான அரசுமுறை பயணத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார். 2025 ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலியில் பயணம் மேற்கொள்வார். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரான்சில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அவர் தற்போது இத்தாலி சென்றுள்ளார். இந்தப் பயணம் முக்கியமான ஐரோப்பிய பங்குதாரர்களுடன் உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதிலும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இத்தாலியுடன் இருதரப்பு வர்த்தகத்தை ஆழப்படுத்தவும், முதலீட்டு ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் இது உதவும்.

இந்தப் பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா – இத்தாலி  கூட்டு ஆணையத்தின் 22-வது அமர்வுக்கு இத்தாலி துணைப்பிரதமரும், வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சருமான திரு அன்டோனியோ டஜானியுடன் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இணைத் தலைமை ஏற்பார்.

ரோம் நகரில் நடைபெறும் இந்த அமர்வு தொழில்துறை 4.0, வேளாண் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கம், எரிசக்தி பரிமாற்றம், நீடித்த போக்குவரத்து வசதி, இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் போன்ற உயர் தாக்கம் கொண்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிவகைகளை அடையாளம் காணவும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மதிப்பீடு செய்யவும் பயன்படும்.

இத்தாலியின் தொழில்துறை மையமான பிரெசியாவில் உள்ள இந்தியா-இத்தாலி வளர்ச்சி அமைப்புக்கு இந்தியாவின் உயர்நிலை வர்த்தக குழுவிற்கு திரு கோயல் தலைமை ஏற்று செல்வார். முதலீட்டை அதிகரிக்கவும், வணிகங்களுக்கிடையே தொடர்புகளை கட்டமைக்கவும் இரு நாடுகளின் தொழில்துறை பங்குதாரர்களை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை …