Friday, September 18 2026 | 08:00:27 PM
Breaking News

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் சிறப்பு இயக்கம் நடைபெற்றது

Connect us on:

2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய  சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம், புதுதில்லியில்  சாகேத்தில் உள்ள மத்திய வக்ஃப் பவனில் ‘தாயின்பெயரில் ஒரு மரக்கன்று நடுதல்’ என்ற சிறப்பு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது.

மத்திய சிறுபான்மை விவகாரங்கள்  அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சக செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார், மத்திய வக்ஃப் கவுன்சிலின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முயற்சி மக்கள் தங்களது தாயாருக்கு மரியாதை செலுத்தும் வகையில்  மரக்கன்று நடுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கவும் வழி வகுக்கிறது.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்து வருவதாக எடுத்துரைத்தார்.

மரம் நடும் இயக்கத்தின் மூலம் பசுமை நிலப்பரப்பை அதிகரிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் அவற்றின் சமநிலையை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

மத்திய வக்ஃப் கவுன்சில்  போன்ற சிறுபான்மை நிறுவனங்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்கும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார். வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 நிறைவேற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வக்ஃப் கவுன்சிலை வலுவான அமைப்பாக  கட்டமைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …