Monday, December 08 2025 | 01:18:06 PM
Breaking News

தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து குடியரசு துணைத்தலைவர்

Connect us on:

“ஆயுஷ்மான் பாரத் என்பது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் போன்ற வடிவங்களில் நமக்கு அதிக மனித வளங்கள் தேவை என்பதைக் குறிக்கிறது. நமக்கு அதிக நோயறிதல் மையங்கள், மருந்துகளுக்கான விற்பனை நிலையங்கள், அதிக ஆராய்ச்சி தேவை. பொது மற்றும் தனியார் துறைகளில் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உருவாக வேண்டும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் போது, ​​ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “நாட்டின் ஆரோக்கியம், வளர்ச்சிக்கு அடிப்படையானது. ஒருவர் மிகவும் திறமையானவராக, மிகவும் ஆர்வமுள்ளவராக, அர்ப்பணிப்புள்ளவராக இருக்கலாம். அவர் சமூகத்திற்கு எல்லாவற்றையும் கொடுக்க விரும்பி, அவருக்கு சுயநலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இல்லாவிட்டால் என்ன செய்வது! மற்றவர்களின் நலனுக்காக பங்களிக்க ஆர்வமாக இருப்பவர், மற்றவர்களின் அனுதாபத்திற்கு ஆளாகிறார். எனவே, ஃபிட் இந்தியா மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும், நீங்கள்தான் அதன் கண்காணிப்பாளர்கள்”, என்று குறிப்பிட்டார்.

“ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு தன்கர், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, நாம் அனைவரும் கவலைப்பட்டோம், அதிர்ச்சியடைந்தோம். ஏப்ரல் 22 ஆம் தேதி, பஹல்காமில், பயங்கரவாதிகள் நம்மைத் தாக்கினர் – அவர்கள் நம் நெறிமுறைகளுக்கு சவால் விடுத்தனர். உலகின் மிகவும் அமைதியை விரும்பும் நாடு, ஆட்சி எல்லையின் விரிவாக்கத்தில் ஒருபோதும் ஈடுபடாத நாடு, இந்தக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. பயங்கரவாதத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பிரதமர் தேசத்திற்கு உறுதியளித்தார். மேலும், பிரதமரின் வாக்குறுதியை நிரூபித்ததற்காக நமது ஆயுதப் படைகளை நாம்  பாராட்ட வேண்டும். முரிட்கே மற்றும் பஹாவல்பூர் ஆகியவை நமது பிரம்மோஸின் வலிமையின் சாட்சியங்களாக உள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் அளவீடு செய்யப்பட்ட, துல்லியமான மற்றும் கணக்கிடப்பட்ட தாக்குதல்களால், பேரழிவு தரும் வகையில், இடிக்கப்பட்டது. இது ஒரு வித்தியாசமான, துணிச்சலான, நம்பிக்கையான, அதேவேளையில் கணக்கிடப்பட்ட பாரதம் என்பதற்கான சான்றுகள் முழு உலகிற்கும் வழங்கப்பட்டன. ஏனெனில் போர் ஒரு தீர்வல்ல. ‘நாம் போரின் சகாப்தத்தில் வாழவில்லை, நாம் ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தையை நாட வேண்டும’, என்று பிரதமர் மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி நமக்கு மிகவும் முக்கியம் என்பதை உலகம் உணர்ந்துள்ளது”, என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி, புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் திரு. ஆர். செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) திரு. எஸ். செல்வகணபதி, நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) திரு. வி. வைத்திலிங்கம், இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  திரு. வி. ஆறுமுகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”