Tuesday, January 13 2026 | 08:26:44 PM
Breaking News

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனம் நடத்தும் யோகா விழிப்புணர்வு இயக்கத்தில் 25000 பேர் பங்கேற்பு

Connect us on:

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள சிங்க்ரௌலியை தளமாகக் கொண்ட மினிரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், சமூகத்தில் யோகா மற்றும் அதன் சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025 ஜூன் 15 முதல் ஜூன் 20, வரை ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 2025 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சர்வதேச யோகா தினம் ஒரு உலகளாவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. நல்வாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது. யோகாவின் காலத்தால் அழியாத ஞானத்தின் மூலம் உலகளவில் மக்களை ஒன்றிணைக்கிறது.

இந்த ஆண்டு யோகா தினம் “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் தனது முயற்சிகள் மூலம் சுமார் 25,000 பேருக்கு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளது. யோகாவின் உடல், மனம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தின் செய்தியைப் பரப்புகிறது.

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் மக்களின் நல்வாழ்வு, மன அமைதி மற்றும் இயற்கையுடனும் அவர்களின் சமூகத்துடனும் வலுவான தொடர்பை நோக்கி ஊக்குவிக்கிறது.

இந்த முயற்சிகள் மூலம், நிறுவனம் தனது பணியிடத்தில் யோகாவை ஒரு நிலையான பயிற்சியாக மாற்றவும், அதன் ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியான சுகாதார நலன்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச யோகா தினமான 2025 ஜூன் 21 அன்று, நிறுவனத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டவர்கள் யோகா அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …