Thursday, December 19 2024 | 11:19:53 AM
Breaking News

சர்வதேச தொலைத் தொடர்பு என்பதை வரையறை செய்வதைக் குறித்த பரிந்துரைகள்

Connect us on:

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சர்வதேச தொலைத்தொடர்பு என்பதை வரையறை செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை, 30.08.2022 தேதியிட்ட செய்திக் குறிப்பு மூலம், சர்வதேச மற்றும் உள்நாட்டு குறுந்தகவல்கள் அனுப்புவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 (திருத்தம்)படி பிரிவு 11(1)(a)-ன் கீழ் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இது தொடர்பாக, பொது மக்கள்  மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை கோரும் வகையில், ‘சர்வதேச தொலைத்தொடர்பு சேவைக்கான வரையறை’ குறித்த ஆலோசனை அறிக்கை 02.05.2023 அன்று வெளியிடப்பட்டது.

மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், ஆட்சேபனைகள், பகுப்பாய்வு முடிவுகள் அடிப்படையில், இந்திய தொலைத்  தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சர்வதேச தொலைத் தொடர்பு சேவைக்கான வரையறை குறித்த பரிந்துரைகளை இறுதி செய்தது.

இந்த பரிந்துரைகளின் நகல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஷூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்

நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஸ்கூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன்  தொலைபேசி வாயிலாக  தொடர்பு கொண்டு பேசினார். இந்தியா, நெதர்லாந்து இடையேயான நம்பிக்கை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கை ஆகியவற்றை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தண்ணீர், வேளாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். வர்த்தகம், பாதுகாப்பு, புதுமை, பசுமை ஹைட்ரஜன் மற்றும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டாண்மையை அதிகரிக்கவும், உத்திசார்ந்த பரிமாணத்தை வழங்கவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.  கல்வி, கலாச்சாரத் துறைகளில் மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகள், பரிமாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதிபூண்டனர்.  இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.