மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தோங்ஜாவோ கிராமம் ‘மட்பாண்டங்களின் நிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே, உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற தலைசிறந்த கைவினைக் கலைஞரான நீலமணி தேவியின் மரபு, இந்த பண்டைய கலையைப் பாதுகாக்க தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. நீலமணியின் திறமைகள் அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததுடன், கிராமத்தின் மண்பாண்ட தொழிலுக்கான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கியப் பங்கும் ஆற்றியுள்ளது. கிராமப்புறங்களில் வீடுகளில் உபயோகிக்கும் பானைகள் முதல், கலைநயம் மிக்க படைப்புகள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் அவர்கள் திறன் வாய்ந்தவர்கள். தங்களது கைவினைப்பொருட்கள் வனையும் திறனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், கலாச்சார பாரம்பரியத்துடன் கூடிய தொடர்புகளை பராமரித்து வருகின்றனர்.
இந்த வளமான பாரம்பரியம் தற்போது கிராமப்புற கலாச்சார நடைமுறைகளைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் நாட்டின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. கலாச்சாரம் சார்ந்த வரைவுகளுக்கான தேசிய இயக்கத்தின் கீழ், எனது கிராமம், எனது பாரம்பரியம் என்ற தளத்தின் வாயிலாக, தோங்ஜாவோவின் மண்பாண்டங்கள், அதன் கைவினை கலைஞர்களின் பெருமையையும் உலக அளவில் கொண்டு செல்ல உதவுகிறது. கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிரூட்டவும், கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகள் உதவுகிறது.