பிரேசிலின் பெலெமில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 30-வது மாநாட்டின் (UNFCCC CoP30) நிறைவு அமர்வில், ஏற்றுக்கொள்ளப்பட்ட பல குறிப்பிடத்தக்க முடிவுகளை இந்தியா வரவேற்றுள்ளது. மேலும், இந்த மாநாட்டின் பிரேசிலின் தலைமைத்துவத்திற்கு இந்தியா வலுவான ஆதரவைத் தெரிவித்தது.
வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி வழங்குவது தொடர்பான நீண்டகால கடமைகளை இந்தியா வலியுறுத்தியது . நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரிவு 9.1-ல் கவனம் செலுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா பாராட்டுத் தெரிவித்தது. 33 ஆண்டுகளுக்கு முன்பு ரியோவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தற்போது பெலெமில் எடுக்கப்பட்ட முடிவுகளும் சர்வதேச ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் என நம்புவதாக இந்தியா கூறியுள்ளது.
ஒருதலைப்பட்சமான வர்த்தக கட்டுப்பாட்டு பருவநிலை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கியதற்காக இந்தியா நன்றி தெரிவித்தது. இந்த பிரச்சினைகளை தொடர்ந்து மூடி மறைக்க முடியாது என்று இந்தியா கூறியது. இந்தப் போக்கை மாற்றியமைக்க பல நாடுகள் இங்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று இந்தியா மேலும் கூறியுள்ளது.
இந்த கருத்துகள் அடங்கிய இந்தியாவின் அறிக்கை பிரேசிலுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இந்தியாவின் ஆதரவையும் நன்றியையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. ஒற்றுமை, பகிரப்பட்ட வளம் ஆகியவற்றால் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வதை உறுதிசெய்ய அனைத்து தரப்பினரும் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்தது.
Matribhumi Samachar Tamil

