Monday, December 08 2025 | 05:15:20 AM
Breaking News

காசி தமிழ் சங்கமத்தின் 4-வது ஆண்டு நிகழ்வு – கலாச்சார தேரை இழுத்துச் செல்லும் இளைய தலைமுறை

Connect us on:

டிசம்பர் 2-ம் தேதி தொடங்கும் காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுக்கு காசி தயாராகி வரும் நிலையில், அதில் பங்கேற்க இளைய தலைமுறையினரிடையே அதிக உற்சாகம் காணப்படுகிறது. இந்த நிகழ்வு காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார, மொழியியல் உறவுகளை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நவம்பர் 29 அன்று கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயிலில் பயணத்தைத் தொடங்கிய முதல் குழுவில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். நீண்ட ரயில் பயணம், விளையாட்டுகள், குழு நடவடிக்கைகள், கலகலப்பான உரையாடல்கள், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புகள் ஆகியவை நிறைந்த கலாச்சார மகிழ்ச்சிப் பயணமாக இது மாறியுள்ளது. இந்த அனுபவம் இளைஞர்களுக்கு மறக்க முடியாததாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்துள்ளது.

இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ச்சனா கூறுகையில், நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்த வாய்ப்பை ஒரு தெய்வீக ஆசீர்வாதமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார். காசியின் வளமான ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை முதல் முறையாக அனுபவிக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

திருப்பூரைச் சேர்ந்த மாலதி என்ற மற்றொரு மாணவி கூறுகையில், தமிழ்நாடும் காசியும் ஆழமான ஆன்மீகப் பிணைப்பைக் கொண்டுள்ளதாக கூறினார். காசி தமிழ் சங்கமம், அந்த பிணைப்பை நவீன வடிவத்தில் வலுப்படுத்துகிறது என்றும், காசிக்குச் செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், காசியில், இளைய தலைமுறையினரின் உற்சாகமான பங்கேற்புடன், காசி படித்துறைகளிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. காசி தமிழ் சங்கமத்தின் முன்னோட்டமாக, நான்காவது ஆண்டு காசி தமிழ்ச் சங்கமத்திற்கான ஓட்டப்பந்தயம் (Run for KTS 4.0) போன்ற நிகழ்வுகள் ஏராளமான இளைஞர்களை ஈர்த்தன.

விஸ்வநாதா் கோயில் பகுதியிலும், பல்வேறு மலைத்தொடர்களைச் சுற்றிலும் இளைய தலைமுறையினரால் நடத்தப்பட்ட தெரு நாடகங்கள், காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார தொடர்பை கலைநயத்துடன் வெளிப்படுத்தின. இளம் படைப்பாளிகள் சமூக ஊடகங்களில் நிகழ்வின் காட்சிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  ரீல்ஸ் உருவாக்குவது தொடர்பான போட்டிகள் மேலும் உற்சாகத்தை அதிகரித்துள்ளன. இது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தூண்டியுள்ளது.

இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருள் “தமிழ் கற்கலாம்” என்பதாகும். இது மொழியையும் கலாச்சாரத்தையும் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளைய தலைமுறையினரின் தீவிர ஈடுபாடு, இந்த கருப்பொருளுக்கு பொருத்தமானதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.