பாரதிய நியாயச் சட்டம், 2023-ன் விதிகளில் பிரிவு 106 துணைப்பிரிவு (2), பாரதிய நகரிகா சுரக்ஷா சன்ஹிதா 2023 சட்டத்தின் முதல் அட்டவணை, பாரதிய சாட்சியங்கள் சட்டம் 2023 ஆகியவை 2023 டிசம்பர், 25 அன்று அறிவிக்கப்பட்டு, 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன,
பாரதிய நியாயச் சட்டத்தில் முதல்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விதிகள் ஒரே பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படும். திருமணம், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அல்லது அடையாளங்களை மறைத்து உண்மைக்கு புறம்பான வாக்குறுதியின் பேரில் வன்புணர்வு கொள்வது போன்ற புதிய குற்றங்களும் இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.